Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்கிட்ட வாங்க… ”அதிகமா தாறேன்” 500பேரிடம் ”ஆசை வார்த்தை” கூறி… ரூ.50,00,00,000 அபேஸ் …!!

அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு சின்னசாமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன். 37 வயதுடைய இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மார்ச் மாதம் முதல் அதே பகுதியில் சர்வ ஹைடெக் சொல்யூஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 2.5 சதவீத வட்டி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார் ரிதுவர்ணன். இந்த அறிவிப்பை நம்பி சிலர் இவரது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆரம்ப காலகட்டத்தில் ரிதுவர்ணன் முதலீட்டாளர்கள் சிலருக்கு தனது வாக்குறுதியை பின்பற்றி பணம் வழங்கியுள்ளார். மேலும் முதலீட்டாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை முதலீடு செய்ய வைத்தால் அதற்கு உரிய கமிஷன் தொகை வழங்குவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் வட்டி மற்றும் இரட்டிப்பு பணம் பெற்ற முதலீட்டாளர்கள் மூலம் பெண்கள் முதியவர்கள் என பலர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். ஒருகட்டத்தில் நிறுவனத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு வட்டி சரிவர கிடைக்காததால் அலுவலகத்தை அணுகி கேட்டபோது ரிதுவர்ணன் கொரோனாவை காரணம் காட்டி பணம் தருவதை இழுத்தடித்து வந்துள்ளார். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்களில் சிலர் முதலீட்டு தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.இந்த நிலையில் பிரச்சனை செய்யும் நபர்கள் சிலருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு தொகையை திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் முதலீட்டாளர்களின் தொந்தரவு காரணமாக தனது செல்போனை அணைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களிடம் 50 கோடி ரூபாய் அளவிற்கு ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனையடுத்து ரிதுவர்ணன் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நிதி நிறுவனத்தில் இயக்குனர்களாக செயல்பட்டு வந்த அவரது நண்பர்கள் ஸ்ரீஹரி மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நிதி நிறுவனத்தின் மூலம் 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் காவல்துறையிடம் சிக்கி உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற நிதி நிறுவன மோசடி கும்பல் இருக்கத்தான் செய்யும் என்பது மறுப்பதற்கு இல்லை.

Categories

Tech |