காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம் பகுதியில் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறிய சப்ளை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பில் கொடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்கு பில் கொடுக்கிறாயா? என்று கூறி சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அது மட்டுமில்லாமல் அந்த ஹோட்டலில் பணிபுரி ஊழியர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஹோட்டல் மேலாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கீவலூர் பகுதியை சேர்ந்த ராம் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களான சார்ஜன், விஜய் உள்ளிட்ட தலைமறைவாக உள்ள அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.