பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளுக்கு நான் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. இந்த சீசன் துவங்கி 40 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறி உள்ளனர். நேற்று ஷிவானி இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியான விஷயமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் அமுதவாணன் போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டுள்ளார். அதாவது, இந்த சீசனில் யார் அம்பு, யார் வில் என கமல் கேட்டார். அதற்கு பலரும் அமுதவாணன் தான் அம்பு என்றும் ஜனனி வில்லு என்றும் கூறினார். ஏனென்றால் ஜனனியை இதுவரை அமுதவாணன் தான் வழி நடத்துகிறார் என்றும் அவர் சொல்வதை அப்படியே ஜனனி கேட்கிறார் என்றும் குற்றசாட்டி இருந்து வருகிறது.
இதனால் அமுதவாணனுக்கு பல போட்டியாளர்கள் அம்பு கொடுக்க, ஜனனிக்கு வில்லை கொடுத்தனர். இதனால் கடுப்பான அமுதவணன் கேமராவை பார்த்து பேசி விஷயங்கள் வைரலாகி வருகிறது. அதில், நான் இங்கு யாரையும் வழிநடத்தவில்லை, எனக்கு அம்பு கொடுத்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, எனக்கு காசு பணம் முக்கியமில்லை தன்மானம் தான் முக்கியம் என்று தயவு செய்து கதவை திறங்க நான் இப்போது வெளியே செல்கிறேன் என்று அமுதவாணன் பேசி உள்ளார். இந்நிலையில் இவர் பேசியதை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதிலும் இவர் விக்ரமுக்கு எதிராக பல விஷயங்களை பேசி வருவதாக விக்ரமின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் விக்ரமின் ரசிகர்கள் பங்கமாய் அமுதவாணனை கலாய்த்து வருகின்றனர்.