Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு!…. மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட பிஸ்தா ஹவுஸ் விமானம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதனையடுத்து ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமான சாலை வழியை சென்றபோது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அந்த பகுதியில் சூழ்ந்த மக்கள் இதனை கண்டு கழித்ததோடு வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். மேம்பாலத்தில் இருந்து அந்த விமானத்தை சேதமின்றி மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு வழியில் விமான ஹைதராபாத் கொண்டுவரப்படும் என்றும் பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |