Categories
உலக செய்திகள்

‘என்ன காப்பாத்துங்க’ பெண்ணின் அலறல் சத்தம் …. மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி …. தோல்வியில் முடிந்த சோகம் …!!!

தரைமட்டமான 12 மாடி கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென்று இடிந்து  விழுந்து தரைமட்டமானது .இந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர்  என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டார். இந்த விபத்து நிகழ்ந்து 10 மணி நேரத்திற்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்ணின் சத்தத்தை கேட்ட மீட்புக் குழுவினர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். அந்தப் பெண் நானும் என் பெற்றோரும்  மாட்டிக் கொண்டு இருப்பதாக மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் நீங்கள் பயப்படாதீர்கள் நாங்கள் உங்களை காப்பாற்ற விடுவோம் என்று அந்தப் பெண்ணுக்கு உறுதியளித்தனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று அந்த இடத்தில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர் .அதன் பிறகு மீண்டும் அந்தப் பெண்ணை அழைத்தபோது அங்கிருந்து எந்த ஒரு சத்தமும் கேட்காததால் அந்தப் பெண்ணை மீட்க முடியவில்லை. அதோடு மீட்பு பணிக்காக இடிபாடுகளில் உள்ள கட்டிடத்தை உடைக்கும்போது மேலும் கட்டிடம் சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த மீட்பு நடவடிக்கையை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 145 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Categories

Tech |