உறங்கச் சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையம் சிந்தன்நகர் 2-வது தெருவில் பிரவீன் என்பவர் வசித்து வந்தார். இவர் வீட்டில் உள்ள தனது அறையில் உறங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் பிரவீன் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டி அழைத்தனர். ஆனால் அதற்கு பிரவீன் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனையடுத்து பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தபோது பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் பெற்றோர் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் பிரவீ னை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பிரவீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்