வீட்டில் கணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சரவணகுமார், தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை வேளையில் வீட்டிற்கு வந்த சரவணக்குமார் அறைக்குள் சென்று உள்புறமாக கதவை பூட்டி விட்டார். இதனையடுத்து சுமார் 1 மணி நேரமாகியும் சரவணகுமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார்.
ஆனால் கதவு திறக்கப்படாததால் மகாலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தபோது சரவணகுமார் மின்விசிறி பொருத்தும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தொங்கி நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சரவணாகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.