என்ஜினீயர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலவீதி சின்ன பையான் தெருவில் ராஜேஷ்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாத் என்ற மகன் இருந்தார். இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே புரோகிராம் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே கோபிநாத் யாரிடமும் சரியாக பேசாமல் சோகமாக தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கோபிநாத் வாங்கி குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கோபிநாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.