Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? திருநங்கையின் விபரீத முடிவு…. திருவாரூரில் சோகம்…!!

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி கிராமத்தில் வின்சிகா என்பவர் வசித்து வந்தார். இவர் திருநங்கை ஆவார். இதனையடுத்து வின்சிகா தன் சக திருநங்கைகளுடன் மாங்குடியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வின்சிகா, ஆண்டிரியா ஆகிய 2 பேரும் திருவாரூர் வந்து உள்ளனர். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் இருவருக்கு இடையில் மனவருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வின்சிகா பாதியிலே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதன்பின் ஆண்டிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வின்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கையான வின்சிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |