கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்தணர்குறிச்சி கிராமத்தில் தமிழரசன் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் வழக்கம்போல் கண்டியூரில் தான் பணிபுரியும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்ற சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது தமிழரசன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் தமிழரசனை தொழிலாளர்கள் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழரசனின் மனைவி பாரதி கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.