Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? குவியல் குவியலாக மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஏரியில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை ஏரியில் தொடர் மழை காரணமாக தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த ஏரியை பராமரிக்கவும், மீன்கள் பிடிக்கவும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் அல்லிக்குட்டை ஏரியில் மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எனவே ஏரி தண்ணீரில் யாராவது விஷம் கலந்து மீன்கள் செத்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். கடந்த 2 நாட்களாக சிறிய வகையிலான மீன்கள் மட்டுமே செத்து மிதந்தது. ஆனால் தற்போது பெரிய மீன்கள் செத்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே ஏரியில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |