தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள எம்.ஒட்டப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.