Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் திடீர் முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

சிமெண்ட் கடை உரிமையாளர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள வன்னியர் தெருவில் நேரு என்பவர் வசித்து வந்தார். இவர் சிமெண்ட் கடை ஒன்று நடத்தி வந்தார். இவர் தனது பழைய இரும்புப் பொருட்கள் வைத்துள்ள குடோனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |