Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் மோதல்…. 8 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்து நிலையத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 8 பேரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மேற்கு ராஜபாளையம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, விக்னேஷ், ராதாகிருஷ்ணன், தினகரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆனந்தபாபு உள்ளிட்ட 4 பேரை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்படி ஆனந்தபாபு, விக்னேஷ், ராதாகிருஷ்ணன், தினகரன் ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதேபோன்று தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி வேல்முருகன், தங்கவேலு, செந்தில்குமார், ரமேஷ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |