புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் மடவாமேடு நடுத்தெருவில் விக்னேஷ் என்பவர் (26) வசித்து வந்துள்ளார் . மீனவரான இவருக்கு துர்கா என்ற பெண்ணுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இருவரும் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த வழக்கில் மீனவர் விக்னேஷ் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.