Categories
மாநில செய்திகள்

லேபிள் ஓட்டும் வேலை செய்யும் திமுக அரசு…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று காலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துவிட்டது இன்னும் 10 முதல் 5% பணிகள் தான் முடிக்க வேண்டியுள்ளது. அதனை விரைவில் முடித்து விடுவோம். அதனைப் போல எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுக்க 741 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் தங்களான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் தொடங்கி வைத்ததாகவும் திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும் அதிமுகம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அரசில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டு வேலை செய்வதா? என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் தொடங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |