Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“என்ன நடந்திருக்கும்” புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவருக்கு  கடந்த 31 ஆம் தேதியன்று பாரதியார் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளி மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வள்ளியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |