ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரியமங்கை ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இறந்தவர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் சென்னை-திருச்சி சோழன் விரைவு ரயில் அவர் மீது மோதி இருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனினும் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.