வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு ரங்கநாதன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த ரங்கநாதனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரங்கநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.