ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனந்தபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் மற்றும் மாரியப்பன் என்பதும், அவர்கள் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் மாரியப்பன் மற்றும் ராமர் கடத்திச்சென்ற ஒரு டன் ரேஷன் அரிசியும், காரையும் பறிமுதல் செய்து அதனை உணவுப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.