சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் தங்கமணி பகுதியில் சென்ற போது அவர்களை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த வாலிபரை விரட்டி மடக்கி பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் குமார் என்பதும் அவர் கஞ்சா விற்பனை செய்தும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் சதீஷ்குமார் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா கஞ்சா விற்ற குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.