தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கிணறு பகுதியில் தடையை மீறி மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு ஒருவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் உறையடிமுத்து என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் உறையடி முத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்ற குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.