Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக சிக்கிய கடைக்காரர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கடையை சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும்  சிராஜூதீன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் சிராஜூதீன் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களான 50 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குற்றத்திற்காக அவர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |