தடையை மீறி மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியிலிருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு 3 பேர் டிராக்டர்களில் மணல் கடத்தியதை கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி, 16 வயதுடைய சிறுவன் மற்றும் இசக்கி பாண்டி என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் மணல் கடத்துவதற்காக பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மணல் கடத்திய குற்றத்திற்காக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.