Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன தைரியமாய் செய்யறாங்க… வசமாக சிக்கிய வியாபாரி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அங்கு அமைந்துள்ள குடோனை சோதனை செய்துள்ளனர். அங்கு காவல்துறையினர் 2 1/2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பிறகு காவல் துறையினர் அங்கு இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அன்னை தெரசா பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், அவர் அதே பகுதியில் அரிசி கடை ஒன்றை வைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வம் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த  செய்த காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |