பிரிட்டன் நாட்டில் ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான செடியை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றார்.
பிரிட்டன் நாட்டில் Daniel Emlyn-Jones என்பவர் தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றார். Gympie-Gympie அல்லது ஆஸ்திரேலியாவில் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த செடி ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும். அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்து வருகின்றார்.
அந்த கூண்டுகளில் அவர் எச்சரிக்கை சின்னங்களை வைத்துள்ளார். மேலும் அவர் தனது தோட்டக்கலையில் கொஞ்சம் சுவாரசியத்தை விரும்பி இதனை செய்து வருகின்றார். இந்த செடியில் இருக்கும் முட்கள் ஒருவரது தோல் மீது குத்தினால், பல மாதங்களுக்கு வலிக்கும் என்றும் தற்கொலை எண்ணங்களுக்கு தூண்டும் என்று கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து முள் குத்திய இடத்தில் முதலில் லேசான எரிச்சல் ஏற்படும், சில நேரத்தில் நெருப்பில் இருப்பது போல் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும் என்றும் அதே நேரத்தில் அமிலம் மற்றும் மின்சாரம் தாக்கியது போல் இருக்குமாம்.
இது குறித்து Daniel Emlyn-Jones கூறியதாவது, “இந்த செடியின் விதைகளை இணையத்தில் பெறலாம். எப்பொழுதும் தாவரங்களை வளர்க்க விரும்பினேன், ஆனால் தான் தோட்ட செடி வகைகளால் சலிப்படைந்ததால், இந்த செடியை வளர்க்க முடிவு செய்ததாக” அவர் கூறியுள்ளார்.