Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுகந்தி மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து சுகந்தியின் அலறல் சத்தம் கேட்டு  அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சுகந்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து சுகந்தியின் தந்தையான செல்வம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுகந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |