Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி…!!!

 விபத்தில் லாரி டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பிரானூர் பகுதியில் டிரைவரான முத்துப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மினி லாரியில் காய்கறி மற்றும் பழம் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வெவ்வேறு மாநிலத்திற்கு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முத்துப்பாண்டி மினி லாரியில்  தான் கொண்டு சென்ற பொருட்களை கேரளா மாநிலத்தில் இறக்கிவிட்டு திரும்ப செங்கோட்டைக்கு புறப்பட்டு கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முத்துப்பாண்டி சென்று கொண்டிருந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி விட்டது. இந்த விபத்தில் முத்துப்பாண்டி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துப்பாண்டியனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |