Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை இப்படியெல்லாம் மிரட்டுறாங்க”…. நடிகை உர்ஃபி ஜாவேத் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

இந்தி தொலைக்காட்சி நடிகை உர்பி ஜாவேத்(25) இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறை குறையாக ஆடை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும் அவர் பேஷன் முயற்சி எனும் பெயரில் பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், மின்சார கம்பிகள், செல்போன் ஆகியவற்றால் ஆன உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவதும் வழக்கம் ஆகும். இந்நிலையில் உர்பி ஜாவேத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்து உள்ளார்.

அதாவது, வாட்ஸ்அப்-ல் ஆபாசமான வார்த்தைகளில் திட்டுதல், கொலை- கற்பழிப்பு மிரட்டல் விடுத்தல், மற்றும் வெவ்வேறு செல்போன் எண்களிலிருந்து குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் வருகிறது என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நவீன் கிரி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Categories

Tech |