Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்னை மிரட்டுறாங்க…. சிக்கிய 4 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கந்து வட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி ரோடு காந்தி நகர் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஊழியராக இருக்கின்றார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அப்போது கடனுக்காக பெற்றுப் பத்திரங்களில் அசோக்குமாரிடம், அஜய் கையெழுத்து வாங்கியதாக தெரிகின்றது. இதனையடுத்து சில மாதங்களுக்குப் பிறகு அஜய்யிடம் அசலும், வட்டியும் சேர்த்து அசோக்குமார் செலுத்தியுள்ளார். அதன்பின் கையெழுத்திட்டு கொடுத்த பத்திரங்களை அசோக்குமார் கேட்டபோது அஜய் கொடுக்காமல் நாட்கள் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜய், அசோக்குமாரிடம் வட்டியும் முதலுமாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூ தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அசோக்குமார் அசலும் வட்டியும் முன்பு செலுத்திவிட்டேன் நான் பணம் தர வேண்டியது இல்லை என்று அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் 3 பேருடன் அசோக்குமார் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியுள்ளார். இதனைதொடர்ந்து அசோக்குமார் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை போன்றோர் கந்துவட்டி கேட்டு மிரட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் அஜய், கதிர், முனிசாமி, ஜெயவேலு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |