பெண் ஒருவர் தான் காளிமாதா என அறிமுகப்படுத்தி பொதுமக்களுக்கு ஆசி வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் உள்ள அக்கினி காளியம்மன் கோவில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க ஒரு பெண் சாமியார் வந்தார். அந்த பெண் சாமியார்களை போன்று இல்லாமல் மார்டனாக அங்கு வந்திருந்தார். இவர் தான் அகில இந்திய யுவமோட்சா தர்மாச்சாரியா பட்டம் பெற்றுள்ளதாகவும், என் பெயர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா என்றும் அங்கு இருப்பவர்களிடம் கூறினார். மேலும் தன்னை யாரும் சாமியார் என்று அழைக்கக்கூடாது நான் காளிமாதா என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் சொந்த ஊர் பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் என்றும், தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார் என்றும் அவரது சீடர்கள் கூறினார்கள். அந்த பெண் சாமியாருக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியனார் எனவும் ஜெயலலிதா அவரை போயஸ் கார்டனில் அழைத்து பேசினார் எனவும் சீடர்கள் தெரிவித்தனர். மேலும் எடியூரப்பா, அவரது மகன் ஆகியோர் அந்த பெண்ணிடம் ஆசி பெற்றதாகவும் தெரிகிறது. இவ்வாறு மாடர்ன் உடை அணிந்து ஊர்வலமாக சென்ற அந்த பெண் சாமியாரிடம் பெரும்பாலானோர் ஆசி பெற்றுக்கொண்டனர்.
அப்போது பெரியவர், சிறியவர் என்று பாராது பலரும் அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர். அதன்பின் அந்த பெண் சாமியார் நிருபர்களிடம் கூறியபோது “மழை வெள்ளத்தால் பயிர்கள் அழுகி விட்டது. இதற்கு மேலும் விவசாயிகளுக்கு கஷ்டதத்தை அனுபவிக்கக் கூடாது. இதனால் அம்மா நிறைவான மனதோடு சந்தோசமா இருக்கணும். மேலும் எல்லாரையும் தீர்க்காயுசா, நல்லவிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பவித்ரா காளி மாதாவுக்கு அழைத்துக் கொடுத்ததால் தான் நான் இங்கே எல்லோரையும் ஆசீர்வதிக்க வந்திருக்கிறேன். எனவே எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது” என்று அவர் கூறினார்.