Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னை டீம்ல எடுக்காதீங்க” …..! கோரிக்க வைத்த ஹர்திக்  பாண்டியா….! காரணம் இதுதான் …..!!!

முழு உடல் தகுதி எட்டும்வரை இந்திய  அணியில் என்னை சேர்க்க வேண்டாம் என  ஹர்திக்  பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் பேட்டிங் பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வந்தார்.அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் முதுகு பிரச்சனைக்காக  அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் முழு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது  .ஆனால் அவர் அப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை .

அதேசமயம் 4 ஓவர்கள்  மட்டுமே பந்துவீசிய அவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இந்நிலையில் டி20 உலக கோப்பையில் குறைவான ரன்கள் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டியில்  ஹர்திக் பாண்டியா இடம்பெறாத நிலையில்  அடுத்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் முழு உடல் தகுதி எட்டும்வரை அணியில் என்னை சேர்க்க வேண்டாம் என ஹர்திக் பாண்டியா இந்திய தேர்வாளர்களிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் முழு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தக்கவைக்க படுவதற்கான வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றது .அதோடு கடந்த 2 சீசனில் அவருடைய செயல்பாடு குறைவாக இருப்பதால் மீண்டும் அவர் ஐபிஎல் ஏலத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |