Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை திட்டலாம்….! “ஆனா என் குடும்பத்தை திட்டுவதற்கு உரிமையில்லை”…வருத்தத்தில் பிரசன்னா…!!

யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என் குடும்பத்தை திட்டாதீர்கள் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

பிரபல பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேரளாவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். அதில்,“நாம் பேசும் வசனத்தைப் போலவே அவர்கள் ஊரில் இந்த வசனம் பிரபலமானது. தவறான புரிதலின் அடிப்படையில், வெறுப்பை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். இதற்காக பிரசன்னாவுக்கு, துல்கர் சல்மான் நன்றி தெரிவித்தார்.

தற்போது பிரசன்னா மேற்படி கூறுவதாவது;

இந்த பிரச்சனை சம்மந்தமாக பலரும் என்னை சமூக வலைதளத்தில் திட்டி தீர்க்கிறார்கள். என்னை திட்டுவது மட்டுமின்றி என்னுடைய அப்பா, மனைவி, குடும்பம் என திட்டுவதற்கு யாருக்கும் எந்த உரிமைக்கும் இல்லை. சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை உருவாக்கி பெரிது படுத்தாதீர்கள்.  அதனால் டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலிருந்து  வெளிவந்து விடலாமா? என்று யோசிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |