Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன்’… அதிதி ராவ் பேட்டி…!!!

நடிகை அதிதி ராவ் ‘என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன்’ என்று கூறியுள்ளார் . 

தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் கார்த்தியுடன் இணைந்து காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர். இதையடுத்து செக்கச் சிவந்த வானம்,  சைக்கோ ஆகிய படங்களிலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் . மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை அதிதி ராவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘சினிமா முழுவதும் நானே இருக்க வேண்டும் என ஆசை இல்லை . திரையில் சில நிமிடங்கள் வந்தாலும் எனக்கு பரவாயில்லை .

Working with Mani Ratnam is life-changing in many ways': Aditi Rao Hydari

தியேட்டரை விட்டு ரசிகர்கள் வீட்டுக்கு சென்ற பிறகும் அவர்கள் மனதை நெருடிக் கொண்டே இருக்க வேண்டும் . அவர்கள் நினைவில் நிற்க வேண்டும் . வித்தியாசமான சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன் . இந்த விஷயத்தில் எனக்கு ஹாலிவுட் நடிகைகள் தான் முன் உதாரணம் . அவர்கள் தங்கள் வேலையை செய்துகொண்டு போவார்களே தவிர மற்றவர்கள் விவாதங்கள், விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் . நானும் அப்படிதான் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை நினைத்து கவலைப்பட மாட்டேன்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |