Categories
உலக செய்திகள்

“என்னையா ஏமாத்துற” காதலனை பழிவாங்க …. காதலி எடுத்த விநோத முடிவு …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயலால் போலீசில் மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீன நாட்டில் ஜெஜியாங் நகரை சேர்ந்த இளம்பெண் Lou என்பவர் Zhu என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் திடீரென்று காதலன் Zhu இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட காதலி Lou அதிர்ச்சியடைந்தார். ஆனால் காதலன்  Zhu வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவது இளம்பெண்  Lou-க்கு  தெரிய வந்துள்ளது. இதனால் தன்னுடைய முன்னாள் காதலன் Zhu -யை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார் .

இதனால் காதலனின் ஆடி காரை வேறொரு நபர் மூலம் வாடகைக்கு எடுத்து அந்தக் காரை ஓட்டியுள்ளார். ஆனால் இந்த இளம்பெண் 50 முறை சாலை விதிகளை மீறியும், 49 முறை சிவப்பு விளக்கு விதியை மீறியும்  ஓட்டியுள்ளார். இதனால் காதலனுக்கு அதிக அளவு அபராதம் விதிக்கப்படும் என எண்ணி இந்த வேலையை செய்துள்ளார் . ஆனால் இறுதியாக போலீஸாரிடம் இளம்பெண் Lou மாட்டிக்கொண்டபோது  காதலனை பழிவாங்குவதற்காக இதை செய்ததாக தெரிவித்தார். ஆனால் சாலை  விதியை மீறியதற்காக போலீசார் அவரை  கைது செய்தனர். இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |