Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு இப்படி நடந்திருக்க கூடாது ? ஆனாலும் நடந்துருச்சு… வேதனைப்பட்டாலும் ரெடியான படிக்கல் …!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, ஆர்சிபி அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் திரும்ப உள்ளார் .

கடந்த ஐபிஎல் சீசனில் ,ஆர்சிபி அணியில் விளையாடிய ,இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,ஆர்சிபி அணியில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். எனவே நடப்பு ஐபிஎல் போட்டிகளிலும் ,அவர் நிச்சயம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியின்போது கொரோனா  தொற்று உறுதியானது. இதன் காரணமாக அவர் தன்னுடைய வீட்டிலேயே  தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது சிகிச்சை முடிந்து, கொரொனோ பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று உறுதியானது .

இதனால் மீண்டும் ஆர்சிபி அணியின் இணைய உள்ளார். தனக்கு ஏற்பட்ட தொற்று பாதிப்பு குறித்து அவர் கூறுகையில், எனக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டது பின்னடைவாக இருந்தது. இந்த நிலை எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது, இருந்தாலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நான் ,அதிலிருந்து விரைவாக குணமடைய நினைத்தேன்.தொற்று ஏற்படுவது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை . மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி முறையான சிகிச்சை மற்றும் நல்ல ஓய்வுக்குப் பின், தற்போது  முழுமையாக குணமடைந்து உள்ளதாக கூறினார். இப்போது என்னுடைய சிந்தனை முழுவதும் பிட்னஸ் மற்றும் பேட்டிங்கில் விளையாடுவதை ,பற்றிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து விளையாடும் போட்டிகளில் ,என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார்.

Categories

Tech |