நாகூரில் நோயால் பாதிக்கப்பட்ட சமையல்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இர்சாத் (27) என்பவர் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார். தோல் நோய் பாதிக்கப்பட்ட இவர் இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.