டெல்லி அணியின் இளம் வீரரான பிரித்வி ஷாவை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டிப் பேசியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ,ஷிவம் மாவி பவுலிங் செய்த முதல் ஓவரில் ,6 பவுண்டரிகளை அடித்து விளாசினார்.இதுபற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சேவாக் கூறும்போது, நான் சாதிக்க முடியாத சாதனையை, இந்த இளம் வீரர் சாதித்துக் காட்டியுள்ளார்.
ஒரே ஓவரில் 6 பந்துகளை தொடர்ந்து பவுண்டரிகளாக அடிப்பது ,சாதாரணமான விஷயம் கிடையாது. தகுந்த முறையில் , சரியான கேப் பார்த்து அடிக்க வேண்டும். நான் விளையாடிய கிரிக்கெட் தொடரில் ,தொடர்ச்சியாக ஆறு பந்துகளை அடித்து விளாசியுள்ளேன் . ஆனால் அந்த ஓவர்களில் எனக்கு 18 – 20 ரன்கள் மட்டுமே கிடைக்கும். நான் இவ்வாறு தொடர்ந்து ,6 பவுண்டரி அல்லது 6 சிக்சர்களை அடித்தது கிடையாது. எனவே பிரித்வி ஷா போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளார். இவ்வாறு 6 பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிகளை அடிப்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் ,அவர் சதம் எடுத்திருந்தால் ,இன்னும் போட்டி நன்றாக இருந்திருக்கும் என்றும் சேவாக் கூறினார் .