Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சக்கரசாமந்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சவர்ணதிற்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |