உலகமெங்கும் கடந்த 2019 ஆண்டில் 77 லட்சம் பேர் 33 வகையான பொதுவான பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தனர். இவற்றில் 50க்கும் மேலான உயிர் இழப்புகளுக்கு 5 பாக்டீரியாக்கள் மட்டுமே காரணம். அந்த பாக்டீரியாக்கள் இ.கோலி, எஸ். நிமோனியா, கே.நிமோனியா, எஸ்.ஆரியஸ் மற்றும் ஏ.பவுமனி ஆகியவைகள் ஆகும். இந்த பாக்டீரியாக்கள் இந்தியாவில் மட்டும் கடந்து 2019 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 80 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்த ஆய்வு தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லேசன்ட்’ மருத்துவ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள புதிய ஆய்வு 33 பொதுவான பாக்டீரியா மற்றும் 11 முக்கிய தொற்று வகைகளுடன் தொடர்புடைய இறப்பு பற்றிய முதல் உலகளாவிய மதிப்பீடுகளை வழங்கி உள்ளது. இ.கோலி என்ற மிகக் கொடிய பாக்டீரியா மற்றும் இந்தியாவில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 82 பேரில் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. அதனைப் போல இஸ்மிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக இந்த பாக்டீரியா தொற்றுகள் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பாக்டீரியாக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை குறைக்க வேண்டியது அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது
இதனையடுத்து உலக அளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்திய பாக்டீரியா எஸ்.ஆரியஸ் ஆகும். இந்த பாக்டீரியாவில் 11 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்த பாக்டீரியாவால் 15 ஆண்டுகளாக் 15 வயதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த பாக்டீரியா இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 340 என்ற அளவில் உள்ளது. மிகக் குறைந்த இறப்புகள் என்றால் அது மேற்கு ஐரோப்பா வட அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆகியவற்றில் தான் நடந்துள்ளது. இதனையடுத்து இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் முர்ரே கூறியது, பாக்டீரியா தொற்றுகள் உலகளவில் சுகாதார நெருக்கடியாக மாறி இருக்கிறது என்பதை முதல் முறையாக இந்த புதிய தரவுகள் காட்டுகிறது. அதிக இறப்புகளை ஏற்படுத்திய பாக்டீரியா இந்த முடிவுகளை உலகளாவிய சுகாதார நடவடிக்கைகளின் ரேடாரில் வைப்பது மிகவும் முக்கியமானது. இதனால் இந்த கொடிய தொற்றுகளினால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கையை குறைக்கவும், இறப்புகளை குறைத்திடவும் முதலீடுகள் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.