நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகி கலையரசன் என்பவரின் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் வருகை புரிந்திருந்தார். மணமக்கள் கௌரிசங்கர்-பரமேஸ்வரி ஆகியோரை வாழ்த்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து வருகிறார். அவர் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அதிமுகவில் 99% தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்றைக்கு கழகம் வலுவாக இருக்கிறது. ஒரு சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அது பொதுக்குழு அல்ல, பொய் குழு. ஓபிஎஸ் கம்பெனிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். ஓபிஎஸ் இன் கட்சி இல்லை, அது நிறுவனம். இன்றைக்கு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பொறுப்பு கொடுத்து ஓபிஎஸ் கேலி கூத்து செய்து வருகிறார்.
அதனை தொடர்ந்து அதிமுகவில் உள்ளவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம். ஏன் என்றால் திமுக மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மின்கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வு உள்ளிடவைகள் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.இதனயடுத்து தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது மகனுக்கும் இடையே லவ் டுடே டிஸ்கஸ் தான் நடந்து கொண்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதை தவிர இந்த அரசு வேறு எந்த திட்டங்களில் கொண்டு வரவில்லை. மழை பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிடாமல் போட்டோ சூட் நடத்தி வந்துள்ளார். மேலும் திமுக அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கி விட்டு அவர்களை சொந்த நிறுவனங்களுக்கு தரம் முன் வருகிறது என்று அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.