இயக்குனர் எஸ். தாணு இயக்கத்தில் “வந்தியத்தேவன்” என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கயுள்ளார்.
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் படங்கள் வருவதும், தலைப்பு வைக்கப்படுவதும் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கும் அது நடந்து வருகின்றது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வரும் வந்தியத்தேவன் கேரக்டரை மட்டும் மயமாக வைத்து “வந்தியத்தேவன்” என்ற பெயரில் ஒரு படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்தாகவும், அதில் கார்த்தி நடிக்க இருந்ததாகவும் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறியுள்ளார். இப்பொழுது அந்த திரைப்படத்தை தயாரிக்கும் திட்டத்திலும் அவர் இருக்கின்றார்.
இதற்கிடையில் ராணி நந்தினி, வர்மன்,பழுவேட்டரையர் மற்றும் அருள்மொழி என்ற பெயர்கள் இந்தத் திரைப்படத்தின் தலைப்பாக பல சங்கங்களில் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் ஒரு கதாநாயகியின் வாக்குமூலம் இந்தத் திரைப்படத்தை இயக்கிய ராஜ் கிருண்ஷா “வந்தியத்தேவன் மீது பி.சி.ஆர் வழக்கு” என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து மரப்பாச்சி, ஆண்கள் ஜாக்கிரதை படங்களை தயாரித்த ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
மேலும் அருள் ஒளிப்பதிவு செய்கின்றார், பால கணேஷ் இசை அமைக்கின்றார். இது குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறியதாவது, “இந்த திரைப்படத்தின் தலைப்பு வந்தியத்தேவன் என்று இருந்தாலும் இது வந்தியத்தேவனின் கதை அல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவாகும் படம். இந்த மாதம் 26 ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க இருக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.