Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் நிறுத்தப்பட்டதா….? படக்குழுவினரின் பரபரப்பு விளக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். முனி போன்ற படத்தை தொடர்ந்து இயக்கி வந்ததற்காக ராகவா லாரன்ஸை பலர் கிண்டல் செய்தாலும் இவரின் படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.

ராகவா லாரன்ஸ் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் முதலாக வெற்றிமாறலுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுத ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதனை அடுத்து இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரம் என்று தலைப்புடன் நடிகர் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சந்திரமுகி 2, துர்கா மற்றும் ருத்ரன் போன்ற படங்களை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து நடித்து வருகின்றார். மேலும் இயக்குனர் துரை செந்தில்குமார் நடிகர் நயன்தாராவின் புதிய படத்தை இயக்க தயாராகியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிகாரம் படம் டிராப் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்துள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அதிகாரம் படக் குழுவினர் கூறியதாவது, “அதிகாரம் படம் கைவிடப்பட்டதாக அதிர்ச்சி வதந்திகள் பரவி வருகின்றது. இந்தப் படத்தில் ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் சூட்டிங் குறித்த திட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரம் திரைப்படம் ட்ராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |