நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே டிஃபரண்டான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இயக்குனர் பொன்ராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாடலான “நல்லா இரும்மா” என்ற பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் யூடியூபில் வைரலாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. நேற்று வெளியான இந்தப் படத்திற்கு டிஃபரண்டான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன் ராமனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசங்கள் ஒரே நாளில் வெற்றி விழாவா? இந்த படம் எப்போ ரிலீஸ் ஆச்சு? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.