தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் தமிழகத்தில் ஆளுநர் என்கின்ற பொறுப்பை மறந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டராக ஆர்.என் ரவி செயல்படுகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இப்படி ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழகத்திற்கும் இடையான உறவில் சிறு சிறு விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆளுநரை திரும்ப கோரி திமுக சார்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாட்டி இருப்பது மத்திய அரசுக்கு பாஜக தலைமைக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. அதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அணிவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் இருந்தபடி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து உள்ளனர். எனவே பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் இவர்களுக்கும் பொருந்தும் என்று அவர்களை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை இந்த விவகாரத்தில் ஆளுநர் பெற்றுள்ளது.
இந்த சூழலில் அரசமைப்பு சட்டத்தின்படி தனது பொறுப்பை உணர்ந்து ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் தட்டி கழித்ததாகவும் பிழையை ஏற்று பதவி விலகுவதை சரி என திருமாவளவன் போர்க்கொடி தூக்கி உள்ளார். இதற்கு இன்னும் வலு சேர்க்கக் கூடிய வகையில், மனசாட்சி, மனிதாபிமானம் இல்லாதவர் ஆளுநர் ரவி என வைகோ எம்பி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுடன் மோதல் போக்கு, திமுக கூட்டணிகட்சிகள் போர்கொடி என அடுத்தடுத்த ஆளுநர் ரவிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் அதை சமாளிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கிவிட்டு ஓரிசா மாநிலத்தில் கவர்னராக உள்ள கணேஷி லாலுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.