Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! வாரிசு படத்தை துணிவு ஓவர் டேக் செய்து விட்டதா….? அட என்னப்பா சொல்றீங்க….!!!!

தல‌ அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் போல பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு படத்தில் விஜயின் நடித்துள்ளார். வம்சி பைடிபல்லி இயக்கி உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் , யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி சூப்பர் ஹிடானத. இந்த படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்ளவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் துணிவு படத்திற்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியை நிறுவனம் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக திரையரங்குகளை உறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வாரிசு படத்தின் இறுதி கட்டப்பிடிப்பு பணிகள் இன்னும் துவங்காத நிலையில் துணிவு படம் ரிலீஸ் பணிகளை மும்முரமாக துவங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு பக்கம் வாரிசு படம் தெலுங்கு மொழியில் ரிலீஸாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |