Categories
கவிதைகள் பல்சுவை

என்னவனுக்காக காத்திருக்கும் உன் உயிர் ஜீவன்..!!!

பெண்ணின் காதல் மனது… என்னவனின் அன்பிற்காக ஏங்கும் உன் உயிரில் கலந்த உன் உயிர் ஜீவன்…

அன்பே உன் நினைவுகளை கல்லில் சிலையாய் செதுக்கி வைத்தால் காலத்தின் காலடி சுவடு பட்டு சிதைந்து விடலாம் .

உன் நினைவுகளை காகிதத்தில் கவிதையாய் எழுதி வைத்தால் வான் மகளின் கண்ணீர் பட்டு அழிந்து விடலாம்.

உன் உணர்வுகளை கண்ணீரில் உயிரோவியமாக தீட்டி வைத்தாலும்  மறைந்து விடலாம்.

உன்னை என் உயிராய் இதயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறேன் மரணம் கூட உடலுக்கு தான்என் உயிருக்கு இல்லை.

கண்களுக்கு என்றும் சுமை இமையில்லை. கைகளுக்கு என்றும் சுமை விரலில்லை. அதுபோல என் இதயத்திற்கு உன் நினைவுகள் என்றுமே சுமை இல்லை.

உன்னை பார்க்காத ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல இருக்கும். அடுத்த நாள் உன்னை பார்த்து பேச என் மனம் துடிக்கும். ஆனால் உன்னை பார்த்த உடன் அந்த நினைவுகள் பறந்து சென்று விடும்.

உன்னை விட்டு பிரிய நான் கனவிலும் நினைத்தது இல்லை. காதல் என்பது காகித வரைபடம் போல் அல்ல. கற்களில் வரைந்த சிற்பம் போல் என்றும் அழியாதது \ உன்மீது நான் வைத்த காதல் போல்.

கடலுக்கு எல்லை உண்டு. கடவுளின் கருணைக்கும் எல்லை உண்டு. காற்றிற்கும் எல்லை உண்டு. ஆனால் நம் பார்வைக்கு எல்லை இல்லை. நம் அன்புக்கு எல்லை இல்லை.  உன்மீது நான் வைத்திருக்கும் காதலுக்கும் எல்லையே இல்லை. உலகின் எல்லைக்கு சென்றதில்லை. ஆனால் காதலில் நான்என் மனதையும் தாண்டி சென்று விட்டேன், உன் அழியா பொய் இல்லாத அன்பினில்.

பகல் என்ற ஒன்று இல்லையென்றால் இரவுகள் இல்லை. இரவுகள் என்ற ஒன்று இல்லையென்றால் கனவுகள் இல்லை. கனவுகள்  என்ற ஒன்று இல்லையென்றால் காதல் இல்லை. உன் அளவு கடந்த அன்பினால் உண்டான காதல் என்ற ஒன்று  இல்லை என்றால் எனக்கு இந்த உலகமே இல்லை.

நான் உன்னை நேசித்ததை விட உன் இதயத்தை நேசித்ததே அதிகம். நீ என் அருகில் முப்பொழுதும் வேண்டும். ஒரு நொடி உன்னை பிரிந்தாலும் அந்த பிரிவை என் இதயம் ஏற்பது இல்லை. உனக்காக வாழும் இதயம் உனக்காக இறக்கவும் துணியும்.  நான் இறந்தாலும்  என் இதயம் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்… என் இதயத்தில் நீ இருந்தால் …

Categories

Tech |