கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் அணி வீரர் , விருத்திமான் சஹா சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார்.
14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி, பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள், நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அன்று நடைபெற இருந்த 30 வது லீக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் மறுநாள் மற்ற அணியில் ஒரு சில வீரர்களுக்கும் பயிற்சியாளர்களும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான விருத்திமான் சஹா சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.
இன்று அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் , பாசிட்டிவ் முடிவு வந்ததாக செய்திகள் வெளியாகியது. இதைப்பற்றி கூறியுள்ள விருத்திமான் சஹா, என்னுடைய கோரண்டடைன் நாட்கள் இன்னும் முடியவில்லை என்றும், சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். வழக்கமாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ,ஒன்று பாசிட்டிவ் முடிவாகவும் மற்றொன்று நெகட்டிவ் முடிவாகும் வந்துள்ளது. மற்றபடி நான் முழு ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாகவும் எனவே பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் ,என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
— Wriddhiman Saha (@Wriddhipops) May 14, 2021