Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னுடை பந்துவீச்சு சிறப்பாக இருப்பதற்கு”….காரணம் இவர்தான் -மனம் திறந்த பும்ரா…!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, நியூசிலாந்து வீரரான ஷேன் பாண்ட் பற்றி தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக பந்துவீச்சில் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் பும்ரா. அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக  திகழ்ந்து வருகிறார். இவர் கடைசி நேரத்தில் எதிரணியினரின் விக்கெட்டுகளை கைப்பற்றவும் ரன்களை கட்டுக்குள் வைப்பதற்கும் இவரை தான் பந்துவீச அழைப்பார்கள். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த பும்ரா என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கு முக்கிய காரணமாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் -க்கு  , முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது , நான் 2015ஆம் ஆண்டு முதல்முறையாக ,ஷேன் பாண்ட்-ஐ  காணும் போது அவருடைய பந்துவீச்சை  கண்டு நான் மிகவும் ரசித்து உள்ளேன். அவருடைய பந்துவீச்சு  என்னை மிகவும் கவர்ந்தது. அவர்  பல்வேறு விஷயங்களில் எனக்கு உதவியுள்ளார். வருடம் தோறும் அவருடைய நட்புணர்வு சிறப்பாக இருந்தது கொண்டு வருகிறது. மும்பை அணியில் இல்லாமல் இந்திய அணியில் விளையாடும் போதும் கூட, அவருடன் பேசுவதற்கு முயற்சி செய்வேன். அதோடு என்னுடைய பந்துவீச்சில் அவர் மிகப்பெரிய பங்கு வகிப்பார் என்று பும்ரா கூறியுள்ளார்.

Categories

Tech |