மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ,அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் ,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸின் 2வது அலை வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து உள்ளது. அதுமட்டுமில்லாது நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ,மருத்துவ உபகரணங்கள் ,ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வென்டிலேட்டர் போன்றவற்றிக்கு ,தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கு , தற்போது மகாராஷ்டிராவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆக்சிசன் தட்டுப்பாட்டால் கடந்த 13-ஆம் தேதி நாலச்சோப்ராவில் உள்ள ,2 தனியார் மருத்துவமனைகளில் 10 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ,நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மகாராஷ்டிராவில் இன்னும் 15 நாட்களில் தொற்றின் எண்ணிக்கை ,இரட்டிப்பாக அதிகரிக்கும் அபாய நிலையில் உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு, 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இம்மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு, 2000 மெட்ரிக் டன் சிலிண்டர் தேவை ஏற்படும். எனவே மகாராஷ்டிராவில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ,மகாராஷ்டிராவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை, விமானங்கள் மூலம் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.